எங்கள் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் - பில் சால்ட்!
இங்கிலாந்து அணியின் கேப்டனாக நான் செயல்படுவது இதுவே முதல் முறை. அதனால் நான் விளையாட்டை வித்தியாசமாக பார்க்க வேண்டியிருந்தது என இங்கிலாந்து அணி கேப்டன் பில் சால்ட் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது. இந்திய நேரப்படி இரவு 7மணிக்கு தொடங்க இருந்த இந்த போட்டியின் டாஸ் நிகழ்வானது மழை காரணமாக தாமதமானது. அதன்பின் தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் இப்போட்டியானது டாஸ் வீசப்படாமலேயே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Trending
முன்னதாக இவ்விரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்த காரணத்தினால், இத்தொடரின் வெற்றியாளருக்கான கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டன. இதனையடுத்து இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது, எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த டி20 தொடர் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணி கேப்டன் பில் சால்ட், “எங்கள் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இத்தொடரை நான் மிகவும் ரசித்தேன். மேலும் இது கொஞ்சம் வித்தியாசமான தொடராகவும் இருந்தது. ஏனெனில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக நான் செயல்படுவது இதுவே முதல் முறை. அதனால் நான் விளையாட்டை வித்தியாசமாக பார்க்க வேண்டியிருந்தது.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் நான் கூடுதல் பொறுப்பையும் அனுபவித்தேன். என்னால் முடிந்தவரை இங்கிலாந்துக்காக விளையாட விரும்புகிறேன். அதேசமயம் அணியின் டாப் ஆர்டராக விளையாடுவது தான் என்னுடைய சிறந்த பேட்டிங் இடமாகவும் நான் என்னி நிரூபித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக ஜோஸ் பட்லர் காயம் காரணமாக விலகியதை அடுத்து பில் சால்ட் இங்கிலாந்து டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now