
இந்தியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா. இவர் இந்திய அணிக்காக 2006ஆம் ஆண்டு அறிமுகமான பியூஷ் சாவ்லா இதுவரி 3 டெஸ்ட், 25 ஒருநாள் மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேசமயம் ஐபிஎல் தொடரில் கடந்த 2008ஆம் ஆண்டில் இருது விளையாடி வரும் அவர் இதுவரை 192 போட்டிகளில் விளையாடி 192 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய வீரர்களை உள்ளடக்கிய தனது ஆல் டைம் சிறந்த ஒருநாள் அணியின் லெவனை பியூஷ் சாவ்லா தேர்வு செய்துள்ளார். அதன்படி அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரையும், இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவையும் சாவ்லா தேர்வு செய்துள்ளார். அதேசமயம் அவர் தனது மூன்றாவது நம்பர் பேட்ஸ்மேனாக முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்கை தேர்வு செய்துள்ளார்.
அவருக்குப் பிறகு நான்காம் வரிசை வீரராக விராட் கோலியையும், 5ஆவது வரிசையில் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவாராஜ் சிங்கையும் தேர்வுசெய்துள்ள அவர், அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அணியின் கேப்டனாக முன்னள் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனியைத் தேர்வு செய்துள்ளார். மேற்கொண்டு அணியின் மற்றொரு ஆல் ரவுண்டராக முன்னாள் கேப்டன் கபில் தேவிற்கு அவர் வாய்ப்பு கொடுத்துள்ளார்.