தனது ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்த பியூஷ் சாவ்லா!
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா தனது ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
இந்தியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா. இவர் இந்திய அணிக்காக 2006ஆம் ஆண்டு அறிமுகமான பியூஷ் சாவ்லா இதுவரி 3 டெஸ்ட், 25 ஒருநாள் மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேசமயம் ஐபிஎல் தொடரில் கடந்த 2008ஆம் ஆண்டில் இருது விளையாடி வரும் அவர் இதுவரை 192 போட்டிகளில் விளையாடி 192 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது ஆல் டைம் சிறந்த ஐபிஎல் அணியின் லெவனை பியூஷ் சாவ்லா தேர்வு செய்துள்ளார். அதன்படி அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயிலை தேர்வு செய்த அவர், மூன்றாம் வரிசையில் விராட் கோலியையும், நான்காம் வரிசையில் சூர்யகுமார் யாதவையும் தேர்வு செய்துள்ளார். அதைத்தொடர்ந்து 5ஆவது இடத்திற்கு தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸை தேர்வு செய்துள்ளார்.
Trending
மேற்கொண்டு யுவராஜ் சிங் மற்றும் மகேந்திர சிங் தோனியைத் தேர்வு செய்துள்ள பியூஷ் சாவ்லா, பந்துவீச்சாளர்களாக வெஸ்ட் இண்டீஸின் சுனில் நரைன், இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் இலங்கை அணியின் லசித் மலிங்கா ஆகியோருக்கு இடமளித்துள்ளார். முன்னதாக பியூஷ் சாவ்லா தனது ஐபிஎல் லெவனின் நான்கு வெளிநாட்டு வீர்ர்களாக சுனில் நரைன், ஏபி டி வில்லியர்ஸ், மலிங்கா மற்றும் ரஷித் கான் ஆகியோரைத் தேர்வுசெய்தார்.
ஆனால் அவர் கிறிஸ் கெயிலிற்கு வாய்ப்பு வழங்கும் நோக்கி தனது அணியில் ரஷித் கானின் பெயரை நீக்கியதுடன், அவரை தொடக்க வீரராகவும் தேர்வு செய்தார். அதற்கு முன் ரோஹித் சர்மா, விராட் கோலியை தொடக்க வீரர்களாக தேர்வு செய்திருந்தார். மேற்கொண்டு இந்த லெவனில் தனது பெயரையும் முதலில் கூறிய பியூஷ் சாவ்லா அதன் பின் தனது பெயரை அந்த பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார்.
பியூஷ் சாவ்லா தேர்வு செய்த ஐபிஎல் லெவன்: ரோஹித் சர்மா, கிறிஸ் கெய்ல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஏபி டி வில்லியர்ஸ், யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, சுனில் நரைன், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, லசித் மலிங்கா.
பியூஷ் சாவ்லா தனது ஆல் டைம் ஐபிஎல் லெவன் அணியை தேர்வு செய்வதற்கு முன்பு, இந்திய அணியின் ஆல் டைம் ஒருநாள் லெவன் அணியையும் தேர்வு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியில், அவர் மகேந்திர சிங் தோனியை கேப்டனாக அறிவித்ததுடன், இந்திய ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ், யுவராஜ் சிங், அனில் கும்ப்ளே மற்றும் ஜாகீர் கான் உள்ளிட்ட வீரர்களுக்கும் இடமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
பியூஷ் சாவ்லா தேவு செய்த ஆல்-டைம் ஒருநாள் இந்திய லெவன்: சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, வீரேந்திர சேவாக், விராட் கோலி, யுவராஜ் சிங், எம்எஸ் தோனி (கேப்டன்), கபில்தேவ், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜாகீர் கான்.
Win Big, Make Your Cricket Tales Now