Advertisement

‘ஐபிஎல் ஒன்றும் ஆஸி தொடர் அல்ல; வீரர்கள் அவர்களது சொந்த செலவில் நாடு திரும்பட்டும்’ - ஆஸி பிரதமர் கரார் பதில்!

ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப விரும்பினால், அவர்களின் சொந்தச் செலவில் விமானம் மூலம் வரலாம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் தெரிவித்தார்.

Advertisement
Players In IPL Will Have To Get Back On Their Own, Says Australian PM Morrison
Players In IPL Will Have To Get Back On Their Own, Says Australian PM Morrison (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 27, 2021 • 08:04 PM

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, ஐபிஎல் தொடரிலிருந்து பல வீரர்கள் பாதியிலேயே விலகினர். குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகியோர் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 27, 2021 • 08:04 PM

இந்நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மே 15ஆம் தேதிவரை இந்தியாவிலிருந்து எந்தப் பயணிகள் விமானமும் ஆஸ்திரேலிய வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

Trending

தற்போது ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், மார்க்ஸ் ஸ்டாய்னிஷ், கம்மின்ஸ், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட 14 வீரர்கள் விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர மேத்யூ ஹேடன், பிரட் லீ, மைக்கேல் ஸ்லாடர், லிசா ஸ்தாலேகர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களும் உள்ளனர்.

ஐபிஎல் தொடரில் விளையாடிவரும் ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர் ஆகியோரின் பயணத் திட்டம், எப்போது புறப்படுகிறார்கள் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விசாரித்துள்ளது. இதற்கு ஐபிஎல் டி20 தொடர் முடியும் வரை இந்தியாவில்தான் இருப்போம் என வாரியத்திடம் வீரர்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச்சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ''ஒவ்வொரு ஐபிஎல் ஒப்பந்தத்திலும் 10 சதவீதத் தொகையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பெற்று வருவதால், ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் தனியாக விமானம் வைத்து வீரர்களை அழைத்துச் செல்ல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் தற்போது மிகவும் குழப்பமான சூழல் நிலவுகிறது. இந்த நேரத்தில் மக்களைச் சிறிதளவு மகிழ்ச்சிப்படுத்த எங்களுக்குக் கிடைத்த வாய்ப்பு ஐபிஎல் மட்டும்தான்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸசன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது“ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ளார்கள். ஆஸ்திரேலியத் தொடரின் ஒரு பகுதியாக ஐபிஎல் டி20 தொடர் இல்லை. ஆஸி.வீரர்கள் சொந்தச் செலவில் சென்றுள்ளதால், அவர்களின் சொந்தப் பணத்தைப் பயன்படுத்திதான் வர வேண்டும். அவர்கள் தாயகம் திரும்ப வேண்டுமானால் சொந்தச் செலவில் நாடு திரும்பலாம்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு ஆகியவை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடும் ஆஸி. வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் ஆகியோருடன் தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்களைக் கடுமையான பயோ-பபுள் விதிமுறையைப் பின்பற்ற வலியுறுத்தியுள்ளோம். இந்தியாவில் இருந்து வரும் களத் தகவல்கள், ஆஸ்திரேலிய அரசின் அறிவுரைப்படி தொடர்ந்து செயல்படுவோம்” என தெரிவித்துள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement