
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக ஷமி, ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயத்தால் பங்கேற்காத நிலையில் ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் காயத்தை சந்தித்த கேப்டன் ரோஹித் சர்மாவும் இத்தொடரிலிருந்து விலகினார்.
அவருக்கு பதில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த கேஎல் ராகுல் முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்த நிலையில் 2வது போட்டியிலும் இந்தியாவை வழி நடத்தி வருகிறார். ஆனால் 2019 வாக்கில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரையும் மிஞ்சும் வகையில் செயல்பட்டு துணை கேப்டனாக முன்னேறிய அவர் சமீப காலங்களில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்தியாவின் தோல்விகளுக்கு காரணமாக அமைந்து வருகிறார். குறிப்பாக இந்தியா தோற்றாலும் பரவாயில்லை எப்படியாவது பெரிய ரன்களை குவித்து விட வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் செயல்படும் அவர் வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதை விட முதல் இன்னிங்ஸ் 150 ரன்களுக்கு வங்கதேசம் சுருண்ட போது கேப்டனாக பாலோ ஆன் கொடுக்க வேண்டிய அவர் மீண்டும் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்து விட வேண்டும் என்ற சுயநலத்துடன் இந்தியா மீண்டும் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அத்துடன் 10க்கு ஓரிரு போட்டியில் அதுவும் கத்துக்குட்டிக்கு எதிராக மட்டுமே பெரிய ரன்களை குவிக்கும் அவர் அதை வைத்து எஞ்சிய 9 போட்டிகளில் குறிப்பாக அழுத்தமான பெரிய போட்டிகளில் சொதப்பலாக செயல்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.