IND vs AUS: டெஸ்ட் போட்டியை காண வரும் மோடி - அல்பானீஷ்!
ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள சூழலில் பிசிசிஐ இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நிறைவடைந்துவிட்டது. இதனையடுத்து ரசிகர்கள் அனைவரின் கவனமும் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் மீது திரும்பியுள்ளது. 4 போட்டிகள் கொண்ட இந்த தொடர் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்த போட்டி பெரும் திருப்புமுணையை ஏற்படுத்தலாம்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், இந்திய அணி 2ஆவது இடத்திலும் உள்ளது. இந்தியா இறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவிடம் வெற்றி பெற்றே தீர வேண்டும். இதற்காக இந்திய அணி நாக்பூரிலும், ஆஸ்திரேலிய அணி பெங்களூருவிலும் பயிற்சி முகாம்களை தொடங்கிவிட்டனர்.
Trending
இந்நிலையில் இத்தொடர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இரு அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட் போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரில் கண்டுகளிக்கவுள்ளார். இவருடன் சேர்ந்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஷும் போட்டியை நேரில் காண வரவுள்ளார். இந்த நிகழ்வு வரும் மார்ச் 9 முதல் 13ஆம் தேதி வரை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டதில் இருந்து ஒருமுறை கூட அவர் போட்டியை காண வரவில்லை. முதல்முறையாக இந்த பிரமாண்ட போட்டியை காண வருகை தருகிறார். அதேசமயம் இந்த தொடரில் இந்தியாவுக்கே அதிக வெற்றி வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக நடைபெற்ற 3 டெஸ்ட் தொடர்களிலும் இந்தியா மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்தியாவை, சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினமாகும். கடைசியாக 2005ஆம் ஆண்டு தான் ஆஸ்திரேலியா இதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now