
வரும் ஜூன் மாதம் ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவின் இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் 20 அணிகளைக் கொண்ட நடத்தப்படவுள்ளது. அதன்படி இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டதுடன், போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில் விராட் கோலி, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இதில் விபத்து காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த ரிஷப் பந்த், நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்த் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ரிஷப் இந்திய அணிக்கு மீண்டும் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் பணிபுரிந்த ஒவ்வொரு கணத்தையும் ரசித்துள்ளேன். இது குறிப்பிடத்தக்க கம்பேக். மேலும் அவர் உலகக்கோப்பையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்புகிறேன்.