
இங்கிலாந்து அணி இம்மாதம் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் வரும் ஆக்ஸட் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இந்த டெஸ்ட் தொடர் நடைபெற இருப்பதால் இரு அணிகளும் கூடுதல் கவனத்துடன் விளையாடவுள்ளன.
இந்நிலையில் இத்தொடருக்கான இரு அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டதுடன், முதல் டெஸ்ட் போட்டிக்காக இரு அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதேசமயம் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளதை அடுத்து இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஒல்லி போப் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் பென் ஸ்டோக்ஸ் காயமடைந்துள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் ஜோ ரூட், பென் டக்கெட் போன்ற நட்சத்திர வீரர்கள் இருப்பதால், இங்கிலாந்து அணி நிச்சயம் சமமான பலத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர் எனும் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.