
இந்திய அண்டர் 19 அணியின் கேப்டனாக இருந்து உலக கோப்பையை வென்றவர் பிரித்வி ஷா அதன் பிறகு சீனியர் அணியில் இடம் பெற்று சதங்களை அடித்தாலும் அணியில் தனது இடத்தை பிரித்வி ஷா இழந்தார்.
ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணி அரை இறுதிக்கு செல்லவில்லை. மேலும் டெஸ்ட் அணியிலும் பிரித்வி ஷா இல்லை. இதனால் ஐபிஎல் தொடர் வரை பிரித்வி ஷாவுக்கு ஓய்வு இருக்கிறது. இந்த ஓய்வை பயன்படுத்திக் கொண்டு மும்பையில் தனது நண்பர்களுடன் பிரித்வி ஷா தனது சொகுசு காரில் ஹோட்டல் ஒன்றுக்கு சென்று இருக்கிறார்.
அந்த ஹோட்டலுக்கு வந்த கும்பல் ஒன்று பிரித்வி ஷாவிடம் செல்ஃபி கேட்டிருக்கிறார்கள். அவரும் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த கும்பல் மீண்டும் ஒரு போட்டோ எடுக்க கேட்டிருக்கிறார்கள்.இதற்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்தவுடன் அந்த கும்பல் பிரித்வி ஷாவுடன் வாய் தகராறில் ஈடுபட்டிருக்கிறது.