
Prithvi Shaw, Hardik and Bhuvi miss out as India name squad for WTC final and England Tests (Image Source: Google)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரில் ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
இந்த டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாகவும், ரஹானே துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்ததும் ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ இப்போதே அறிவித்துள்ளது.