பிரித்வி ஒரு சூப்பர்ஸ்டார் - ரிக்கி பாண்டிங்
ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தொடங்கவுள்ள நிலையில், இத்
ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தொடங்கவுள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், பிரித்வி ஷா விளையாடுவதை பார்த்தால் வருங்காலத்தில் அவர் மிகப்பெரும் சூப்பர்ஸ்டாராக மாறுவார் என்று தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய பாண்டிங், "கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மூலம் நான் பிரித்வி ஷாவிடம் சில சுவாரஸ்யமான உரையாடல்களை மேற்கொண்டேன். அப்போது அவரை நான் எப்படி சிறந்த வீரராக மாற்றிவது என்ற ஆலோசனையில் இருந்தேன்.
ஆனால் தற்போது எனக்கு அந்த கவலை கிடையாது. ஏனெனில் கடந்த சில மாதங்களாக பிரித்வி ஷா விளையாடுவதை பார்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் அவர் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டுவருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தற்போது விளையாடும் விதத்தைப் பார்த்தால் எதிர்காலத்தில் கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டாராக வருவார் என்று தோன்றுகிறது" என்று தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்ட பிரித்வி ஷா 827 ரன்களை குவித்து, அணி சாம்பியன் பட்டத்தை வெல்லக் காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now