மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரித்வி ஷா!
மோசமான உடற்தகுதி காரணமாக மும்பை ரஞ்சி அணியில் இருந்து நட்சத்திர வீரர் பிரித்வி ஷா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் புகழின் உச்சியை எட்டிய வீரர்களில் ஒருவரும் பிரித்வி ஷா. தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்திய பிரித்வி ஷா, இந்திய அணியின் அடுத்த சச்சின் டெண்டுல்கர் என்றும் புழகப்பட்டார். ஆனால் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரித்வி ஷா, 2020ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப முடியாத சூழலிற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அவரும் ஐபிஎல் தொடர், கவுண்டி கிரிக்கெட் தொடர், உள்ளூர் போட்டிகள் என தனக்கு கிடைக்கு வாய்ப்புகளில் அவ்வபோது சதங்களை விளாசி காவனத்தை ஈர்த்து வந்தாலும், அவரது உடற்தகுதி என்பது அவரின் வாய்ப்புக்கு முதல் தடையாக உள்ளது. இந்நிலையில் தற்சமயம் அவரது மோசமான உடற்தகுதியின் காரணமாக நடப்பு சீசன் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர் விளையாடி வரும் மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
Trending
அந்தவகையில் இந்திய அணியின் பாரம்பரியமிக்க கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் எலைட் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள மும்பை அணியானது பரோடா அணிக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினாலும், மஹாராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து அந்த அணி அடுத்ததாக திரிபுரா அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடவுள்ளது. இந்நிலையில் தான் உடற்தகுதி காரணத்தால் இப்போட்டிக்கான மும்பை அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார். முன்னதாக நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் முதாலிரண்டு போட்டிகளிலும் விளையாடிய பிரித்வி ஷா அதில், 7,12,01 மற்றும் 39 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Prithvi Shaw has been excluded from Mumbai's squad for their upcoming Ranji Trophy match against Tripura!#CricketTwitter #RanjiTrophy #PrithviShaw #Mumbai pic.twitter.com/Ue4bJp0HVr
— CRICKETNMORE (@cricketnmore) October 22, 2024
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு பிரித்வி ஷாவின் உடலில் 35 சதவீதம் கொழுப்பு இருப்பதாகவும், மீண்டும் அணிக்கு வருவதற்கு முன் அவருக்கு கடுமையான பயிற்சி தேவை என்றும் மும்பை அணி நிர்வாகம் எம்சிஏவிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் உடல் எடையை குறைத்து மீண்டும் முழு உடற்தகுதியை எட்டும் பட்சத்திலேயே அவருக்கு ரஞ்சி அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என மும்பை கிரிக்கெட் சங்க ஆதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now