இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர் தான் - விராட் கோலி!
இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட ரோஹித் சர்மா தயாராகவுள்ளார் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்த உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 12-சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நமீபியா அணியை எதிர்த்து தற்போது விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்திய அணி இடம் பெற்றிருந்த இந்த குரூப் இரண்டில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று முன்னேறி உள்ளதால் இந்த போட்டியில் இந்திய அணி பெறும் வெற்றியோ, தோல்வியோ எந்த முடிவையும் மாற்றாது.
எனவே இந்த போட்டி கேப்டன் விராட் கோலிக்கு கடைசி போட்டியாக அமைந்துள்ளது. மேலும் கேப்டனாக விராட் கோலி கடைசி போட்டியில் விளையாடுகிறார் என்பதால் இந்த போட்டியில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போட்டியோடு இந்திய அணி நாடு திரும்பி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருக்கிறது. அந்த தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய கேப்டன் செயல்பட இருக்கிறார்.
Trending
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி டாஸிற்கு பிறகு சில விசயங்களை பகிர்ந்து கொண்டார். அப்படி அவர் கூறுகையில், “இந்த போட்டியில் நாங்கள் முதலில் பந்து வீச விரும்புகிறோம். எப்போதுமே டாஸ் ஜெயிப்பது மிக முக்கியமான விசயம். கடைசி இரண்டு போட்டிகளாக நாங்கள் டாசில் வெற்றி பெற்று சிறப்பாக விளையாடி வருகிறோம். இதைத்தான் முதல் நாளில் இருந்தே எதிர்பார்த்தோம்.
இந்திய அணிக்காக கேப்டனாக செயல்பட்டது எனக்கு கிடைத்த கவுரவம். என்னுடைய கேப்டன்சி நாட்களில் நான் சிறப்பாக செயல்பட்டு உள்ளேன். இப்போது அதில் இருந்து வழி விட்டு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்திய அணி அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவும் தற்போது தயாராகி விட்டது. ரோஹித் அடுத்ததாக அணியை வழிநடத்த தயாராக இருக்கிறார். இந்திய கிரிக்கெட் தற்போது நல்ல நிலையில் உள்ளது” என்று தெரிவித்தார்.
Also Read: T20 World Cup 2021
அவரது இந்த கருத்தை வைத்துப் பார்க்கும்போது நிச்சயம் டி20 கிரிக்கெட்டில் அடுத்த கேப்டனாக ரோகித் சர்மா தான் செயல்படுவார் என்றும், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குவார் என்பதும் உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now