
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்தவரிசையில் ஆசிய அணிகள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடின.
இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியை வீழ்த்தி 8ஆவது முறையாக ஆசிய கோப்பையை வென்று அசத்தியது. இதையடுத்து இம்மாத இறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடாவுள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 22ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் செப்டம்பர் 22ஆம் தேதி மொஹாலியில் முதலாவது ஒருநாள் போட்டியும், செப்டம்பர் 24ஆம் தேதி இந்தூரில் 2ஆவது ஒருநாள் போட்டியும், செப்டம்பர் 27ஆம் தேதி ராஜ்கோட்டில் மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெறவுள்ளது.