Advertisement
Advertisement
Advertisement

நிறைய போட்டிகளின் முடிவு பவர் ப்ளேவிலேயே தெரிந்துவிடும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!

இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வினே தற்போது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 23, 2022 • 19:41 PM
R Ashwin takes DIG at Team India openers Rohit Sharma, KL Rahul as spinner explains need for experim
R Ashwin takes DIG at Team India openers Rohit Sharma, KL Rahul as spinner explains need for experim (Image Source: Google)
Advertisement

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்து 2 வாரங்கள் ஆகிவிட்டது. எனினும் இந்தியா மீதான விமர்சனங்கள் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை. இந்திய அணியில் ரோகித் சர்மாவின் கேப்டன்சியை மாற்ற வேண்டும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை மாற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வினே தற்போது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Trending


இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அஸ்வின், “டி20 கிரிக்கெட் என வரும்போது, வெற்றி தோல்விகள் மிகவும் சிறிய ரன் வித்தியாசத்தில் தான் இருக்கும். ஒரே ஒரு பந்தில் தோற்கலாம் அல்லது ஒரே ஒரு பந்தில் வெற்றி பெறலாம். இதனை விட முக்கியமான ஒன்று பவர் ப்ளே.

நிறைய போட்டிகளின் முடிவு பவர் ப்ளேவிலேயே தெரிந்துவிடும். ஒரு அணி பவர் ப்ளேவின் முடிவில் 30 ரன்கள் அடித்து, எதிரணி 60 ரன்களை அடித்தால் அங்கேயே ஆட்டம் முடிந்தது. ஆனால் பவர் ப்ளே தான் ஆட்டத்தை தீர்மானிக்கிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மையாக உள்ளது. பரிசோதனை செய்து பார்ப்பதற்கு டி20 கிரிக்கெட்டில் நிறைய இடங்கள் உள்ளன. ஆனால் முக்கியமான போட்டிகளில் நம் பலத்தை அறிந்து முழுமையாக அதனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார். 

இவை அனைத்துமே இந்திய தொடக்க வீரர்கள் ரோகித் - கேஎல் ராகுலை குறிக்கின்றன. இந்த தொடரின் பவர் ப்ளேவின் மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டுடன் இருந்த 4ஆவது அணி இந்தியா ஆகும் (95.85 ). 9 பந்துகளுக்கு ஒரு பவுண்டரி தான் சென்றுள்ளது. அதாவது ரோஹித் சர்மா , கேஎல் ராகுல் ஆகியோர் ஒரு பந்திற்கு ஒரு ரன்னிற்கும் குறைவாக அடித்துள்ளனர்.

ரோஹித் சர்மா - கேஎல் ராகுல் ஜோடி மொத்தமாக 6 போட்டிகளில் 88 ரன்களை மட்டுமே அடித்தனர். அவர்களின் சராசரி பார்ட்னர்ஷிப் 14.66 ரன்கள் மட்டுமே ஆகும். அரையிறுதியில் இந்தியா 38/ 1 என இருக்க, இங்கிலாந்து அணி 66/1 என வலுவான நிலையில் இருந்தது. இதனை தான் அஸ்வின் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement