
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்றுவரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. இத்தொடரில் ரஷித் கான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியானது குரூப் சி பிரிவில் இடம்பிடித்திருந்தது. அதன்படி இத்தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை ஈட்டியுள்ளது.
இந்த வெற்றிகளின் மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி ஆஃப்கானிஸ்தான் அணி அசத்தியுள்ளது. இதனால் சூப்பர் 8 சுற்றிலும் ஆஃப்கானிஸ்தான் அணி தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் உகாண்டா அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் விளையாடிய முஜீப் உர் ரஹ்மான், காயம் காரணமாக அடுத்தடுத்த போட்டிகளைத் தவறவிட்டார். இதனையடுத்து அவர் உலகக்கோப்பை தொடரிலிருந்தும் விலகியுள்ளதாக ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அவருக்கு மாற்று வீரராக அதிரடி தொடக்க வீரர் ஹஸ்ரதுல்லா ஸஸாய் ஆஃப்கானிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.