Advertisement

ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொண்டது நல்லது - கௌதம் கம்பீர்!

ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் எதிர்வரும் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி நல்ல கிரிக்கெட்டை விளையாட முடியும் என நம்பிக்கை இருக்கிறது என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 29, 2023 • 22:38 PM
ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொண்டது நல்லது - கௌதம் கம்பீர்!
ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொண்டது நல்லது - கௌதம் கம்பீர்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் நடைபெற்று முடிந்த  2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின், இந்திய அணியில் ராகுல் டிராவிட்டின் தலைமை பயிற்சியாளருக்கான பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தொடர்ந்து ராகுல் டிராவிட் நீடிப்பாரா இல்லை விவிஎஸ் லக்சுமன் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் உலகக்கோப்பையில் ராகுல் டிராவிட்டின் தலைசிறந்த பங்களிப்பையும், இந்திய அணியில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும் பாராட்டியிருக்கும் பிசிசிஐ, தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக செயல்பட ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளது.

ராகுல் டிராவிட்டின் பதவி நீட்டிப்பு குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, “ உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றிபெறுவதெல்லாம் சாதாரண விசயம் கிடையாது. ஒரு சரியான பாதையில் இந்திய அணியை வழிநடத்தியதற்காக நாம் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை பாராட்ட வேண்டும். நாங்கள் ராகுல் டிராவிட்டை ஒரு தலைமை பயிற்சியாளராக முழுவதுமாக ஆதரிக்கிறோம். தொடர்ந்து அவர் இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல அனைத்து ஆதரவையும் வழங்குவோம்” என தெரிவித்துள்ளார்.

Trending


இந்நிலையில் டிராவிட் பதவிக்காலம் நீட்டிப்பு குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர், டி20 உலகக்கோப்பை நெருங்கிவரும் நிலையில் டிராவிட் நீடித்திருப்பது அவசியம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,  “ டி20 உலகக் கோப்பை நெருங்கி வருகிறது. இந்த நேரத்தில் தலைமை பயிற்சியாளர் மற்றும் சப்போர்ட்டிங் ஸ்டாஃப்ஸ் அனைவரையும் மாற்ற வேண்டிய அவசியமில்லை.

ராகுல் இதை ஏற்றுக்கொண்டது நல்லது. டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் நமக்கு 7 மாதங்கள் மட்டுமே இருக்கின்றன. நாம் தொடர்ந்து அதிரடியான கிரிக்கெட்டை விளையாடிவருகிறோம். எதிர்வரும் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி நல்ல கிரிக்கெட்டை விளையாட முடியும் என நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அடுத்த மாதம் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக மீண்டும் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement