முதலிரண்டு போட்டிகளில் கேஎல் ராகுல் பங்கேற்க மாட்டார் - ராகுல் டிராவிட்!
ஆசிய கோப்பைக்கான முதல் 2 போட்டியில் கேஎல் ராகுல் விளையாடமாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்துக்கு எதிரான தொடரை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட கையோடு இந்திய அணி வீரர்கள் ஆசிய கோப்பை 2023 தொடருக்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஒன்று கூடினர். அங்கு வீரர்களுக்கு யோ யோ டெஸ்ட் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், பயிற்சி போட்டியும் நடத்தப்பட்டது.
இதில், யார் யாருக்கு எந்த இடம் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு, போட்டி நடக்கும் போது வீரர்களின் வரிசையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரானது 30ஆம் தேதி நாளை முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது.
Trending
முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதுகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது செப்டம்பர் 2 ஆம் தேதி இலங்கையில் நடக்கிறது. இந்த நிலையில், ரோஹித் சர்மா தலமையிலான இந்திய வீரர்கள் இன்று இலங்கைக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.
ஆனால், கேஎல் ராகுல் மட்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக இலங்கைக்கு புறப்பட்டு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. பெங்களூருவில், கேஎல் ராகுல் மீது மட்டும் முழு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவருக்கு என்று அதிக நேரம் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
KL Rahul To Miss First Two Games!#Cricket #India #AsiaCup2023 #KLRahul pic.twitter.com/y0KebOPwdJ
— CRICKETNMORE (@cricketnmore) August 29, 2023
இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான முதல் 2 போட்டியில் கேஎல் ராகுல் விளையாடமாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “கேஎல் ராகுல் மிகவும் நன்றாக முன்னேறி வருகிறார். ஆனால் ஆசிய கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளான பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திற்கு எதிராக அவர் விளையாடமாட்டார்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now