Advertisement
Advertisement
Advertisement

அவர் கூட இருப்பதால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவோம் - கேஎல் ராகுல்!

டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan November 16, 2021 • 13:25 PM
'Rahul Dravid Is Big On Setting A Good Team Culture Of Selflessness': KL Rahul
'Rahul Dravid Is Big On Setting A Good Team Culture Of Selflessness': KL Rahul (Image Source: Google)
Advertisement

தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்த காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி குறிப்பிடத் தகுந்த வெற்றி பெற்றது. ஆனால் தொடர்ந்து ஐசிசி தொடர்களில் இந்தியா சொதப்பி வந்தது. மேலும் அணியில் வீரர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வந்ததால், அடுத்த போட்டியில் நாம் விளையாடுவோமா? இல்லையா? என்ற பய உணர்வில் வீரர்கள் இருந்தனர்.

அஸ்வின் போன்ற சிறந்த சுழற்பந்துவீச்சாளர் இங்கிலாந்து தொடரில் ஓரங்கட்டப்பட்டது. விஹாரி போன்ற டெஸ்ட் வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டது.

Trending


டி-20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் பேட்டிங் வரிசையை மாற்றியது, முச்சதம் விளாசிய கருண் நாயர், அடுத்த போட்டியில் அணியிலேயே தேர்வு செய்யாமல் விட்டது போன்ற முடிவுகளை எடுத்த பெருமை கோலி, ரவி சாஸ்திரியே சேரும்.

இந்த நிலையில் தான் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். டிராவிட் எப்போதும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் மனிதர். மேலும் திறமையான வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு போதிய ஆதரவை வழங்கி அவர்களுக்கு உதவி செய்பவர். திறமையும், உழைப்பையும் கொட்ட வீரர்கள் தயாராக இருந்தால், அவர்களை ஏற்றிவிட்டு அழகு பார்ப்பவர்.

டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். வீரர்களுக்கு ஏற்ற நல்ல சூழலை டிராவிட் உருவாக்குவார். அவர் இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராக இருந்த போது, நான் 2 போட்டிகளில் விளையாடி இருந்தேன். அப்போது நான் சிறப்பாக செயல்பட்டதாக உணர்ந்தேன். அதே போன்ற ஒரு சூழல் இந்திய சீனியர் அணியிலும் டிராவிட் உருவாக்குவார். இதனால் இனி சிறப்பாக விளையாடுவோம் என நம்புகிறேன் என்று கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்

கே.எல்.ராகுல் டி-20 போட்டிகளுக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது முதல் சவாலாக இந்திய அணி பலம் வாய்ந்த நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. கே.எல். ராகுலோ, இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களின் இன் சுவிங் பந்துகளை எதிர்கொள்ள சற்று திணறுகிறார். டி-20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அத்தகைய பந்தில் தான் ஆட்டமிழந்தார். அதே யுத்தியை நியூசிலாந்தும் பின்பற்றும் என்பதால், கே.எல்.ராகுல் அதனை எதிர்கொள்வதே பெரிய சவாலாக இருக்கும்.

Also Read: T20 World Cup 2021

நியூசிலாந்துக்கு எதிரான ஆடுகளம் மிகவும் சிறிய மைதானம் என்பதால் இந்திய அணி ஒரு சுழற்பந்துவீச்சாளரை மட்டும் வைத்து விளையாட திட்டமிட்டுள்ளது. இதனால் 3 வேகப்பந்துவீச்சாளர், ஒரு ஆல் ரவுண்டர் , ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்ற எண்ணிக்கையில் இந்திய அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement