
இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு இறுதியாக அணியை அறிவிக்கும் நாளாக செப்டம்பர் 28ஆம் தேதி இன்று கடைசி நாளாக இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தங்களது மாற்றம் செய்யப்பட்ட அணிகளை இன்று அறிவிக்கும் என்பது உறுதி. இரு அணிகளின் ரசிகர்களுமே அதற்காக காத்திருக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய தரப்பை எடுத்துக் கொண்டால் நிச்சயமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உலகக் கோப்பை அணியில் மாற்றம் இருக்கும் என்று கூறலாம். ஏனென்றால் முன்பு மார்னஸ் லபுஷாக்னே இல்லை. தற்பொழுது அவரது ஆட்டம் சிறப்பாக இருக்கின்ற காரணத்தினால் அவரது தேவை இருக்கிறது. எனவே மாற்றம் இருக்கலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் அக்ஸர் பட்டேல் காயம் சரியாக விட்டால் நிச்சயம் மாற்றம் வருவது உறுதி. அதே சமயத்தில் ஷர்துல் தாக்கூர் இடத்தில் அஸ்வின் அல்லது மற்றும் ஒரு வேகப்பந்துவீச்சாளரை கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கவும் செய்கிறது. நடைபெற இருக்கும் உலகக் கோப்பையில் மிக வலிமையான அணிகளாக கணிக்கப்பட்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று தங்களது அணிகளை இறுதி செய்யும் என்கின்ற காரணத்தினால், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.