
இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்து கேப்டனாக இருப்பார் என முன்பு பேசப்பட்டது.விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் ஓய்வுக்கு செல்லும்போதெல்லாம் இவர்தான் கேப்டனாக இருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இவர் காயம் காரணமாக அடிக்கடி திடீரென்று அணியிலிருந்து விலகும் நிலை இருந்தது.
இதனால், காயத்தை முழுமையாக குணமாக்க ஐபிஎல் 15ஆவது சீசன் முடிந்த பிறகு ஜெர்மனிக்கு சென்று அறுவை சிகிச்சை சென்று கொண்டார். இதனால் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இவரால் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில், கடந்த ஜூலை 29ஆம் தேதி தொடங்கிய வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டார்.
கே.எல்.ராகுல் முழு பிட்னஸுடன் இருப்பதால், தொடர்ந்து அதிரடி காட்டி ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அந்த சமயத்தில் கரோனாவில் பாதிக்கப்பட்டதால் தொடரிலிருந்து முழுமையாக விலகும் நிலை ஏற்பட்டது.