
விராட் கோலி கேப்டனாகவும் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராகவும் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டதற்கு பின்னால் ரோஹித் சர்மா கேப்டன் ஆகவும் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் ஆகவும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டார்கள். ரவி சாஸ்திரி போல் தலைமை பயிற்சியாளர் பதவியில் ராகுல் டிராவிட் பெரிய வெற்றிகளை பெற்றெடுக்கவில்லை.
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஆரம்பித்து, ஆசிய கோப்பையில் இறுதி போட்டிக்கு தகுதி பெறாதது, டி20 உலக கோப்பையில் அரையிறுதி தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தோல்வி என்று இந்த பட்டியல் இருக்கிறது. ஆனாலும் ரவி சாஸ்திரியை விட ராகுல் டிராவிட் பயிற்சி காலத்தில் நடக்கக்கூடிய மிகச்சிறப்பான விஷயம் என்னவென்றால் வீரர்களுக்கு வாய்ப்புகள் உடனுக்குடனே நிறுத்தப்படுவதில்லை. அணியில் எடுக்கப்பட்ட வீரர்களை தொடர்ச்சியாக பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்த வகையில் இந்திய அணியில் நிறைய வீரர்கள் உள்ளே வந்து அவர்கள் தங்களை நிரூபிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று நம்பிக்கையுடன் விளையாட செய்கிறார்கள். ராகுல் டிராவிட் அண்டர் 19 அணிக்கு எப்படி ஆன பயிற்சி முறைகளை வைத்திருந்தாரோ, அதேபோல இங்கும் அணிக்கு வரும் இளம் வீரர்களுக்கு நல்ல நம்பிக்கையை கொடுக்கக் கூடியவராக இருக்கிறார்.