அணி மாற்றங்கள் செய்யாதது குறித்து ராகுல் டிராவிட் விளக்கம்!
தென் ஆப்ரிக்கா அணியுடனான ஐந்து டி.20 போட்டியிலும் ஆடும் லெவனில் மாற்றமே செய்யாததற்கான காரணத்தை ராகுல் டிராவிட் வெளியிட்டுள்ளார்.
இந்தியா வந்த தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 2 போட்டியில் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், டி.20 தொடரை தீர்மானிக்கும் கடைசி டி.20 போட்டி நேற்று நடைபெற்றது.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியிலும் டாஸை வென்ற தென் ஆப்ரிக்கா அணி, கடந்த நான்கு போட்டிகளை போலவே இந்த போட்டியிலும் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த தொடரில் வழக்கம்போல் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3.3 ஓவரில் 28/2ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது, மழை நின்றபின் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மழை விடாததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த தொடர் 2-2 என சமன் செய்யப்பட்டது.
Trending
இந்த நிலையில் இந்த தொடர் குறித்தான பல்வேறு விஷயங்களை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுநர்கள் பேசி வருகின்றனர். அந்த வரிசையில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவிய பொழுதும், அதே ஆடும் லெவனை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்பதற்கான விளக்கத்தை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ராகுல் டிராவிட், “ஒரு தொடர் அல்லது ஒரு போட்டியின் முடிவுகளை வைத்துகொண்டு விமர்சிப்பவர்களை எனக்கு சுத்தமாக பிடிக்காது. இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள் நிச்சயம் அதற்கான தகுதி படைத்தவர்கள் தான். இந்தத் தொடரில் அவர்கள் பங்கேற்று இருப்பது அவர்கள் சம்பாதித்தது. இந்தத் தொடரைப் பொருத்தமட்டில் சில போட்டியில் நன்றாக அமையும் சில போட்டிகள் மோசமாக அமையும், குறிப்பாக இந்த தொடரில் ஆரம்பத்தில் தடுமாறிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ருத்ராஜ் போன்ற வீரர்கள் தங்களுடைய திறமையை சில போட்டிகளில் வெளிப்படுத்தினர்.
தற்பொழுது நாம் உலக கோப்பை தொடரை நெருங்கிக் கொண்டிருக்கிறோம், நிச்சயம் அந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம், உலக கோப்பை தொடரில் 15 வீரர்களை உள்ளடக்கிய ஒரு ஸ்க்வாட் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் தகுதியான 18-20 வீரர்களில் இருந்துதான் அந்த அணியை நம்மால் தேர்ந்தெடுக்க முடியும் நிச்சயம் தற்போது நடந்து முடிந்த இந்த தொடர் உலகக் கோப்பை தொடருக்கான தகுதியான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now