நான் இன்னும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை - ராகுல் டிராவிட்!
நான் இன்னும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. ஆனால் என்னுடைய பதவிக்காலம் குறித்து மட்டுமே அவர்களுடன் நான் விவாதித்தேன் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பயிற்சி காலம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி பதவி காலம் முடிவுக்கு வந்ததும், அந்த வருடத்தின் நவம்பர் மாதம் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.
அவர் பயிற்சியாளராக வந்ததும் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்து அதிர்ச்சி அளித்தது. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதும் ஏற்பட்ட அதிர்வால் இந்திய அணி தன்னுடைய நிலைத்தன்மையை இழந்தது. அதன் பிறகு அணியை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயமும், அதே சமயத்தில் அணி புதிய கலாச்சாரத்தில் மற்றும் அணுகு முறையில் விளையாட வேண்டிய கட்டாயமும் இருந்த காரணத்தினால் அதில் ராகுல் டிராவிட் கவனம் செலுத்தி நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்தார்.
Trending
இதற்கான பலன் நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் தான் அவருக்கு கிடைத்தது. அதற்கு முன்பு அவர் செய்த பரிசோதனை முயற்சிகள் தோல்வி அடைந்த காரணத்தினால், ரசிகர்கள் அவர் பயிற்சி மீதான விமர்சனத்தை வைத்திருந்தார்கள். ஆனால் தற்பொழுது அதை எல்லாம் அவர் மாற்றி இருக்கிறார்.
இந்த நிலையில்தான் கடந்த 28ஆம் தேதி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ராகுல் டிராவிட் மற்றும் அவரது பயிற்சி குழுவை சேர்ந்தவர்கள் அப்படியே இந்திய அணியின் பயிற்சி ஆளாக தொடர்கிறார்கள், அடுத்த வருடம் டி20 உலக கோப்பைக்கு இவர்களே இருப்பார்கள் என்று அறிவித்தது. மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா மற்றும் தலைவர் ரோஜர் பின்னி இருவரும் இது தொடர்பாக செய்திகளை வெளியிட்டார்கள்.
இந்த நிலையில் இதுகுறித்து பேசி உள்ள ராகுல் டிராவிட் கூறும் பொழுது “நான் இன்னும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. ஆனால் என்னுடைய பதவிக்காலம் குறித்து மட்டுமே அவர்களுடன் நான் விவாதித்தேன். இது சம்பந்தமாக பேப்பர்கள் என்னிடம் வந்தால் கையெழுத்திடுவது தொடர்பாக யோசிக்கலாம்” என்று கூறியிருக்கிறார். தற்பொழுது பயிற்சியாளர் பதவி தொடர்பாக ராகுல் டிராவிட் இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now