Advertisement

ENG vs IND, 1st test : மழையால் கைநழுவும் ஆட்டம்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் மழையால் தாமதமாகியுள்ளது.

Advertisement
Rain Delays Last Day Of Intriguing England-India 1st Test
Rain Delays Last Day Of Intriguing England-India 1st Test (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 08, 2021 • 05:30 PM

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4ஆம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்கள் அடிக்க, இந்திய அணி 278 ரன்கள் அடித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 08, 2021 • 05:30 PM

95 ரன்கள்  பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 303 ரன்கள் அடித்தது. எனவே 208 ரன்கள் முன்னிலை பெற்றதையடுத்து, 209 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டிவருகிறது. 4ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் அடித்துள்ளது. கடைசி நாளில் இந்திய அணியின் வெற்றிக்கு 157 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இந்திய அணி வெற்றிக்கு அருகில் இருந்தது.

Trending

கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில், இந்திய அணியின் கையில் 9 விக்கெட்டுகள் இருந்ததால் 157 ரன்களை இந்திய அணி எளிதாக அடிக்கும் சூழல் இருந்தது. ஆனால் இந்திய நேரப்படி, இன்று பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்கியிருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக முதல் செசன் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழை நின்று கடைசி 2 செசன்கள்  முழுவதும் ஆடினால் கூட, இந்திய அணி வெற்றி பெறலாம். அதற்கிடையிலும் மழை குறுக்கிட்டால், எளிதான வெற்றி வாய்ப்பை கொண்ட இந்திய அணிக்கு அது பாதிப்பாக அமையும். மேலும் போட்டி டிராவிலும் முடியக்கூடும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement