
Raina surprised with Australia’s decision not to play warm-up games (Image Source: Google)
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்தடைந்து பெங்களூருவில் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் போல பந்து வீசும் பரோடா அணியின் மகேஷ் பித்தியா என்ற பந்துவீச்சாளரை வைத்து சுழல் பந்துவீச்சுக்கு எதிரான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடாமல் பந்துவீச்சாளர்களை பந்துவீசச் செய்து பயிற்சி பெற்று டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ள ஆஸ்திரேலிய அணியின் முடிவு குழப்பமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.