Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த விக்ரம் ரத்தோர்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த விக்ரம் ரத்தோர்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த விக்ரம் ரத்தோர்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 20, 2024 • 01:15 PM

உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஐபிஎல் தொடரானது 18ஆவது சீசனை நோக்கி பயணித்து வருகிறது. அந்தவகையில் எதிர்வரும் 18ஆவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 20, 2024 • 01:15 PM

அதுமட்டுமில்லாமல் இத்தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கான மெகா எலாமும் நடைபெறவுள்ளதால் இத்தொடரின் மீது கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளன. இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் தங்களது பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தங்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரரும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டை நியமித்துள்ளது. 

Trending

கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இந்த தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்த நிலையில், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த நிலையில் தான் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மேலும் ஒரு பயிற்சியாளரை அணியில் இணைத்துள்ளது. அதன்படி இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது. இந்த அந்த அணி நிர்வாகம் தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் உறுதிசெய்துள்ளது. தற்போது பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் விக்ரம் ரத்தோர், ராகுல் டிராவிட்டுடன் இணைந்து இந்திய அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக செயல்பட்டு வந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில் இப்பதவி குறித்து பேசிய விக்ரம் ரத்தோர், “ராயல்ஸ் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பது ஒரு பாக்கியம். ராகுலுடன் மீண்டும் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் இப்போது திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் உற்சாகமாக உள்ளது. ராயல்ஸ் மற்றும் இந்தியாவுக்காக சாம்பியன்ஷிப்களை வெல்வதற்கு உதவக்கூடிய உயர்தர வீரர்களை உருவாக்கும் எங்கள் இலக்கை நோக்கி, அணியின் தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிப்பதை எதிர்நோக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement