
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 26ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் 2 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி மற்றும் 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி பங்கேற்றுள்ளது. அதன்படி 2 நாட்கள் கொண்ட முதல் போட்டி நேற்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி கேப்டன் ஜோஷ் பொஹானன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இங்கிலாந்து அணி தரப்பில் ஜென்னிங்ஸ் – லீஸ் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ஜென்னிங்ஸ் 25 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இதனை தொடர்ந்து இளம் வீரர் ஆகாஷ் தீப் வீசிய பந்தில் லீஸ் 35 ரன்களில் போல்டாகி வெளியேற, தொடர்ந்து கேப்டன் பொஹானன் 8 ரன்களிலும், ஆலிவர் பிரைஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக இங்கிலாந்து லயன்ஸ் அணி 81 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜேம்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழக்க, ராபின்சன் – மவுஸ்லி கூட்டணி இணைந்தது.