Advertisement
Advertisement
Advertisement

பாபர் - ரிஸ்வான் கூட்டணியை பிரித்தது ஏன்? - ரமீஸ் ராஜா கேள்வி!

பாபர் மற்றும் ரிஸ்வானின் தொடக்க ஜோடியை பிரிக்க அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 19, 2024 • 20:17 PM
பாபர் - ரிஸ்வான் கூட்டணியை பிரித்தது ஏன்? - ரமீஸ் ராஜா கேள்வி!
பாபர் - ரிஸ்வான் கூட்டணியை பிரித்தது ஏன்? - ரமீஸ் ராஜா கேள்வி! (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரர்களாக சிறப்பான ஆட்டத்தை பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை வெளிப்படுத்தி வந்தது. ஆனால் தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தானின் தொடக்க ஜோடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தொடக்க வீரராக களமிறங்கும் முகமது ரிஸ்வான் பெரிதளவில் சோபிக்க தவறினார். 

அதேசமயம் மறுபக்கம் மூன்றாம் வீரராக களமிறங்கும் பாபர் ஆசாம் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இருப்பினும் அந்த அணி தொடர்ச்சியாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 4 தோல்விகளைப் பதிவுசெய்துள்ளது. மேலும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின் அந்த அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியைச் சந்திந்துள்ளது. 

Trending


இந்நிலையில் பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் மாற்றம் குறித்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா, “பாபர் மற்றும் ரிஸ்வானின் தொடக்க ஜோடியை பிரிக்க அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதியவர்களை அணிக்குள் கொண்டு வருவதில் தவறில்லை.

லீக் கிரிக்கெட்டில் அந்த வீரர் சிறப்பாக செயல்படலாம். சர்வதேச கிரிக்கெட் என்பது வேறு. பெரிய அளவில் நெருக்கடி மற்றும் எதிர்பார்ப்பு இருக்கும். உலக அளவில் பெயர் பெற்ற பாபர் மற்றும் ரிஸ்வான் இணையை பிரித்து உள்ளீர்கள். ஒரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பார்மிற்கு வர நேரம் எடுக்கும். அதற்கு அதிக பயிற்சி வேண்டும். டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி வரும் இணையரை பிரிக்க வேண்டிய அவசியம் என்ன..?. அதன் மூலம் உங்களுக்கு என்ன பலன்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement