
இந்தியாவின் பாரம்பரியமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் மிக முக்கியமானது ரஞ்சி கோப்பை கிரிகெட் தொடர். அந்தவகையில் நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள சத்தீஸ்கர் மற்றும் தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த ரஞ்சி கோப்பை போட்டியானது கோயாம்புத்தூரில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் முதலில் பேட்டிங் செய்த சத்தீஸ்கர் அணியில் ஆயுஷ் பாண்டே சதம் விளாச, அனுஜ் திவாரி, சஞ்சீத் தேசாய், எக்னாத் கெர்கெர், அஜய் மண்டல் ஆகியோர் அரைசதங்களை விளாசி அசத்தினர். இதன் முதல் இன்னிங்ஸில் சத்தீஸ்கர் அணி 500 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஆயுஷ் பாண்டே 124 ரன்களையும், அனுஜ் திவாரி 84 ரன்களையும், சஞ்சீத் தேசாய் 82 ரன்களையும் சேர்த்தனர். தமிழ்நாடு அணி தரப்பில் அஜித் ராம் 4 விக்கெட்டுகளயும், சித்தார்த் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதால் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணியில் ஷாரூக் கான், ஆண்ட்ரே சித்தார்த் ஆகியோரு அரைசதம் கடந்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறிய காரணத்தால் 77.2 ஓவர்களில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பாலோ-ஆன் ஆனது.