ஐபிஎல் 2023:அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறிய ரஷித் கான்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் குஜராத் அணியின் ரஷித் கான் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கான பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 35ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி சுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர் ஆகியோரது அதிரடியின் காரணமாக 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.
அதிலும், கடைசி 6 ஓவர்களில் மட்டும் குஜராத் அணி பேட்ஸ்மேன்கள் 94 ரன்களை குவித்தனர். இதன் காரணமாக குஜராத் அணி ஐபிஎல் வரலாற்றில் 2வது முறையாக 200 ரன்களுக்கு மேல் குவித்தது. இதையடுத்து கடின இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த் இஷான் கிஷன் - கேமரூன் க்ரீன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். அதன்பின் ஆட்டத்தை எட்டாவது ஓவரை குஜராத் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் வீசினார். அந்த ஓவரில் 13 ரன்களை எடுத்திருந்த இஷான் கிஷன் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா 2 ரன்களில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
இதன்மூலம் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள ரஷித் கான் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கான பர்பிள் தொப்பியையும் சொந்தமாக்கியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now