1-mdl.jpg)
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
அதேசமயம் குரூப் பி பிரிவில் இருந்து எந்த இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டியில் விளையாடவுள்ளனர். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால், இந்த வாழ்வா சாவா ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் புதிய வரலாறு படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.