கேப்டன்சியிலிருந்து விலகினார் ரஷித் கான்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக ரஷித் கான் அறிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், டி20 உலக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதில் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், டி20 உலக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பதவியை ரஷித் கான் ராஜினாமா செய்துள்ளார்.
உலகக்கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்படும் போது கேப்டன் என்ற முறையில் தேர்வுக்குழுவினர் தன்னிடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், தன்னிடம் கலந்தாலோசிக்காமலேயே அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
— Rashid Khan (@rashidkhan_19) September 9, 2021
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ரஷித் கான் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக முகமது நபி செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now