-mdl.jpg)
ஆஃப்கானிஸ்தான் அணியானது தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது நெய்டாவில் உள்ள ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் தொடர் மழை காரணமாக இப்போட்டியின் நான்கு நாள் ஆட்டமும் டாஸ் வீசப்படாமலேயே முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியானது முழுவதுமாக கைவிடப்படும் வாய்ப்பும் உள்ளது.
இதனையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
மேற்கொண்டு இத்தொடருக்கான டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் அறிமுக ஆல் ரவுண்டர் ஆண்டிலே சிமெலேனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆல்ரவுண்டர் ஜேசன் ஸ்மித் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் நகாபா பீட்டர் ஆகியோருக்கு ஒருநாள் அணியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.