Advertisement

இவர்கள் இருவரும் விரைவில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் - ரவி சாஸ்திரி!

ரிங்கு சிங் மற்றும் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் விரைவிலேயே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 12, 2023 • 16:40 PM
 Ravi Shastri bats for Yashasvi Jaiswal and Rinku Singh's prompt national selection
Ravi Shastri bats for Yashasvi Jaiswal and Rinku Singh's prompt national selection (Image Source: Google)
Advertisement

ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 150 ரன்கள் 13 ஓவர்களில் சேஸ் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது, ராஜஸ்தான் அணி . அந்த அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரை சதம் எடுத்து ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்தார் . நேற்று அவர் எடுத்த அறை சதம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் வேகமாக எடுக்கப்பட்ட அரை சதங்களில் இரண்டாவதாக இருக்கிறது . முதலிடத்தில் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது யுவராஜ் சிங் 12 பந்துகளில் அடித்த அறை சதம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் சில போட்டிகளில் தடுமாறிய ஜெய்ஸ்வால் பின்னர் தொடர்ச்சியாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 12 போட்டிகளில் ஆடி இருக்கும் அவர் 575 ரன்கள் எடுத்துள்ளார் . இதில் மும்பை அணிக்கு எதிராக அடித்த ஒரு சதமும் அடங்கும் . தொடர்ச்சியாக ரண்களை குவிப்பதோடு நல்ல ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடி வருவதால் இந்திய அணியில் துவக்க வீரருக்கான வாய்ப்பு இவருக்கு பிரகாசமாக இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .

Trending


இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் பிரபல வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, “ரிங்கு சிங் மற்றும் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் விரைவிலேயே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பை காக தயாராகிக் கொண்டிருக்கும்போது டி20 கிரிக்கெட் போட்டிகளில் இவர்கள் போன்ற இளம் வீரர்களை தேர்வு செய்து வாய்ப்பு கொடுப்பதன் மூலம் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கு பலமான அணியை உருவாக்க முடியும்.

இவர்களைப் போன்ற திறமையான வீரர்களுக்கு இப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் தேர்வு குழுவினர் எந்த மாதிரியான அணியை தேர்வு செய்யப் போகிறார்கள் என தெரியவில்லை. வீரர்கள் நன்றாக பார்வையில் இருக்கும்போதே தேசிய அணியில் அவர்களை தேர்வு செய்து விளையாட வைப்பது தான் சரியான முடிவாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement