
Ravi Shastri, Bharat Arun and Sridhar return positive RT-PCR test results (Image Source: Google)
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், நான்காவது போட்டியும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார்.
மேலும் அவருடன் தொடர்பில் இருந்த பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.