
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் மாதம் ஏழாம் தேதி துவங்குகிறது. இதற்கான அணி ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தற்போது, நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் காயம் அடைந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து கே எல் ராகுல் விலகி இருக்கிறார்.
மேலும் உனட்கட் காயமடைந்து இருக்கிறார். இதையடுத்து கேஎல் ராகுலுக்கான மாற்று வீரராக இஷான் கிஷானை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. அதேசமயம் உனாத்கட் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தேசிய கிரிக்கெட் அகாதமியில் உள்ளதால், அவர்களின் உடற்தகுதிப் பொறுத்தே மாற்று வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது இந்த வீரர்களுக்கு யார் மாற்று வீரர்கள் ஆக இருப்பார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். கேஎல் ராகுல் இரண்டாவது விக்கெட் கீப்பராக அணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.