BGT 2024: முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ரவி சாஸ்திரி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கணித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. அந்தவகையில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இந்த தொடரின் முதல் போட்டி வரும் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.
இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் பழைய பெர்த் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா தனிபட்ட காரணங்களால் பங்கேற்க மாட்டார் என்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. இதனால் ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்தவார் என்று கூறப்படுகிறது.
Trending
ஆனால் இங்குள்ள மிகப்பெரும் கேள்வி யாதெனில் ரோஹித் சர்மா விளையாடாத பட்சத்தில் அவருக்கான மாற்று தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு தான் தற்சமயம் அதிகரித்துள்ளது. ஏனெனில் அணியின் மாற்று தொடக்க வீரர்களாக அறிமுக வீரர் அபிமன்யூஸ் ஈஸ்வரன் மற்றும் அனுபவம் வாய்ந்த கேஎல் ராகுல் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதால், இதில் யார் அணியின் தொடக்க வீரர் என்ற குழப்பமும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும், அணியின் தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது கணிப்பை தெரிவித்துள்ளார். அதன்படி ரவி சாஸ்திரியின் அறிவித்துள்ள பிளேயிங் லெவனில் அணியின் தொடக்க வீரர்களாக யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
மேற்கொண்டு கேஎல் ராகுலை அவர் மூன்றாம் வரிசையில் வகைப்படுத்தியுள்ளார். அடுத்தடுத்த இடங்களில் விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ள் ரவி சாஸ்திரி, சமீபத்தில் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜூரெலிற்கும், அறிமுக வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிதீஷ் குமார் ரெட்டிக்கும் அவர் தனது பிளேயிங் லெவனில் இடம் கொடுத்துள்ளார்.
மேற்கொண்டு அணியின் சுழற்பந்துவீச்சாளராக ரவீந்திர ஜடேஜா அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை தேர்வு செய்துள்ள அவர், வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் ரவி சாஸ்திரி கணித்துள்ள இந்த அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், சர்ஃப்ராஸ் கான், பிரஷித் கிருஷ்ணா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை அவர் தேர்வு செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
ரவி சாஸ்திரி கணித்த இந்திய அணியின் பிளேயிங் லெவன்: ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா/வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.
Win Big, Make Your Cricket Tales Now