
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் நம்பர் ஒன் வீரராக இருக்கும் சூர்யகுமார் யாதவ் உலக அளவில் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்தாலும் டி20 கிரிக்கெட்டை தவிர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த தடுமாறியே வருகிறார். அவரது தடுமாற்றத்தை சமீப காலமாக இந்திய அணியும் பார்த்துக் கொண்டுதான் வருகிறது.
ஆனாலும் அவரின் திறன் மீதுள்ள நம்பிக்கை காரணமாக எதிர்வரும் ஆஸ்திரேலியா தொடர் மற்றும் உலகக்கோப்பை தொடரிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 27 போட்டிகளில் விளையாடி இரண்டு அரைசதங்கள் மட்டுமே அடித்து 24 ரன்கள் என்கிற மோசமான சராசரியையே வைத்துள்ளார்.
இப்படி ஒருநாள் கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் புள்ளி விவரங்கள் பற்றிய விமர்சனங்கள் பலரது மத்தியிலும் விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் சூரியகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சாதிக்க வேண்டும் என்றால் சில விடயங்களை கடைபிடித்தால் போதும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி அட்வைஸ் செய்துள்ளார்.