Advertisement

‘அணியில் யாரும் நண்பர்கள் இல்லை’ - விளக்கமளித்த அஸ்வின்!

அணியில் தற்பொழுது நண்பர்களாக இல்லை வீரர்களாக மட்டுமே இருக்கிறார்கள் என்று கூறியதற்கான விளக்கத்தை இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 18, 2023 • 14:08 PM
‘அணியில் யாரும் நண்பர்கள் இல்லை’ - விளக்கமளித்த அஸ்வின்!
‘அணியில் யாரும் நண்பர்கள் இல்லை’ - விளக்கமளித்த அஸ்வின்! (Image Source: Google)
Advertisement

தற்போதைய உலக கிரிக்கெட்டில் நடந்து வரும் அனைத்து விஷயங்களை விரல் நுனியில் வைத்திருக்கக் கூடிய, நடப்பில் விளையாடும் ஒரே வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கிறார். இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு என்பது மேலும் கீழும் சென்று கொண்டே இருந்தாலும், வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் எல்லாம், அவர் தன்னை நிரூபித்து, அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தித் தந்து, வெற்றியைக் கொண்டு வரக்கூடியவராக இருக்கிறார்.

அதே சமயத்தில் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டு இருந்தும், அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால், அதுகுறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாதவராக, எப்பொழுதும் அதை கடந்து செல்பவராக இருக்கிறார். ஒட்டுமொத்த இந்திய அணியை எடுத்துக் கொண்டால் அவர்கள் ரவிச்சந்திரன் அஸ்வினை கிரிக்கெட் குறித்தும் அந்தந்த போட்டி குறித்தும் ஆடுகளங்கள் குறித்தும் மிகத் தெளிவான பார்வையை கொண்டிருக்க கூடிய ஒரு புத்திசாலித்தனமான வீரராகவே பார்க்கிறார்கள்.

Trending


இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக ” முன்பு இந்திய அணியில் வீரர்கள் நண்பர்களாக இருந்தார்கள், தற்பொழுது நண்பர்களாக இல்லை வீரர்களாக மட்டுமே இருக்கிறார்கள்” என்று கூறியிருந்தார். அப்போது அவரது கருத்து பெரிய சந்தேகங்களை ரசிகர்கள் மத்தியில் கிளப்பியது. அணிக்குள் சூழ்நிலை சரியில்லை என்று பேசப்பட்டது.

தற்பொழுது இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் மனம் திறந்து தெளிவாக விளக்கம் கூறி பேசியிருக்கிறார். அதில் அவர், “நான் சொல்வதும் மக்கள் புரிந்து கொள்வதும் வேறாக அந்த விஷயத்தில் அமைந்துவிட்டது. நான் சொன்னது என்னவென்றால், முன்பு சுற்றுப்பயணங்கள் நீண்ட காலமாக இருந்ததால் அணிக்குள் நட்புக்கு அதிக வாய்ப்பு இருந்தது.

ஆனால் இந்த காலகட்டத்தில் நாங்கள் வெவ்வேறு கிரிக்கெட் வடிவங்களில் வெவ்வேறு அணிகளில் விளையாடுகிறோம். வெவ்வேறு அணிகளுக்காக விளையாடும் பொழுது நட்புக் கொள்வது என்பது கடினம் என்று நான் எப்பொழுதும் நம்புகிறேன். போட்டியிடுவதற்கு போட்டி மனப்பான்மையைக் கொண்டு மோத வேண்டும்.

நீங்கள் ஐபிஎல் விளையாடும் பொழுது மூன்று மாதம் உங்கள் சர்வதேச அணியின் வீரர்கள் உங்களுக்கு எதிர்ப்பாக மாறுவார்கள். நீங்கள் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடும் பொழுது நட்புக்கு வாய்ப்பில்லை என்று நான் கூறவில்லை. நட்புக்கு வாய்ப்பு கடினம் என்று சொல்கிறேன். இதில் நெகட்டிவ் ஆக எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement