
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்று 18 ஆண்டுகள் ஆவதால் எப்படியாவது இம்முறை தொடரை கைப்பற்ற வேண்டிய முயற்சியில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு பெரிய ஆபத்தாக காத்திருப்பது தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தான். இதுவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் . அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு பெரும் சவாலாக இருப்பார் ஏனெனில் ஆஸ்திரேலிய அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் மிகவும் அதிகம்.
அஸ்வின் கிட்டத்தட்ட 200 விக்கெட்டுகளுக்கு மேல் இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்தி இருக்கிறார். இதன் காரணமாக அஸ்வினை எப்படியாவது சமாளிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணி புதிய முயற்சியை எடுத்துள்ளது. அதாவது பரோடாவை சேர்ந்த மகேஷ் பித்யா என்ற பந்துவீச்சாளரை ஆஸ்திரேலியா அணி பயிற்சி முகாமில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. அவர் அஸ்வினின் ஜெராக்ஸ் போல் பந்து வீசுவதால் அவர் எதிர்கொள்வது மூலம் அஸ்வினை சமாளிக்க முடியும் என ஆஸ்திரேலிய வீரர்கள் யோசித்துள்ளனர்.