
Ravichandran Ashwin's India's Playing XI England 1st Test: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார்.
ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நாளை இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றன. இதில் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த கணிப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பிளேயிங் லெவனைத் தேர்வு செய்துள்ளார்.
தனது யூட்யூப் காணொளி வாயிலாக அஸ்வின் தனது பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கேஎல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள், சாய் சுதர்ஷன் நம்பர்-3 இல் விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். அவர்களைத் தொடர்ந்து கேப்ட்ன் ஷுப்மான் கில் நான்காவது இடத்திலும், ரிஷப் பந்த் 5அம் இடத்திலும், கருண் நாயர் 6ஆவது இடத்திலும் விளையாடுவார்கள்.