
ஆஸ்திரேலியா - தென் ஆபிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமான இன்று முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில் அந்தப் போட்டி டிராவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது . இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியா அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது இந்தத் தொடரை இந்திய அணி 3-1 இன்று வெற்றி பெறும் பட்சத்தில் வேறு எந்த அணிகளின் வெற்றி தோல்விகளையும் எதிர்பார்க்காமல் அவர்களால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக தகுதி பெற முடியும் .
ஆஸ்திரேலியா அணியானது கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது . அதன் பிறகு இரண்டு முறை ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது . இந்திய அணியின் பெஸ்ட் ஆல் ரவுண்டரும் முன்னணி சிலர் பந்துவீச்சாருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியானது உறுதியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்று தெரிவித்துள்ளார் .