இங்கிலாந்து தொடரில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி 06ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டரச்னின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். முன்னதாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கு ஜடேஜா தற்சமயம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான அணியில் விளையாடி வருகிறார்.
Trending
இந்தியா vs இங்கிலாந்து ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள்
நாக்பூரில் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் ஆண்டர்சனின் சாதனையை முறியடிக்கவுள்ளார். தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 31 போட்டிகளில் 40 விக்கெட்டுகளுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதேசமயம் ரவீந்திர ஜடேஜா தற்போது 26 போட்டிகளில் 39 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்துவார்.
இதுதவிர்த்து இந்த தொடரில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை பூர்த்தி செய்வார். ரவீந்திர ஜடேஜா இதுவரை ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 உட்பட 351 சர்வதேச போட்டிகளில் விளையாடி 597 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனை அவர் பூர்த்தி செய்யும் பட்சத்தில் இந்திய அணிக்காக இந்த மைல் கல்லை எட்டும் 5ஆவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார். இதற்கு முன் அனில் கும்ப்ளே (953 விக்கெட்டுகள்), ரவிச்சந்திரன் அஸ்வின் (765 விக்கெட்டுகள்), ஹர்பஜன் சிங் (707 விக்கெட்டுகள்), மற்றும் கபில் தேவ் (687 விக்கெட்டுகள்) ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர்.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா.
Win Big, Make Your Cricket Tales Now