
சீனாவில் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் காலிறுதி போட்டியில் நேபாளை 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு ஹங்கொழு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 202/4 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக சதமடித்து 100 ரன்களும், ரிங்கு சிங் 37 ரன்களும் எடுக்க நேபாள் சார்பில் அதிகபட்சமாக திபேந்திர சிங் 2 விக்கெட்டுகள் சாய்த்தார் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 203 ரன்களை துரத்திய நேபாளுக்கு குசால் புர்டெல் 28, ஆசிப் சேக் 10, கௌசல் மல்லா 29 என ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதனால் மிடில் ஆர்டரில் திப்பெந்திர சிங் 32, சுந்தீப் ஜோரா 29 ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் நேபாளை 179/9 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தல 3 விக்கெட்களை சாய்த்தனர். முன்னதாக இந்த போட்டியில் தமிழக இளம் வீரர் சாய் கிஷோர் அறிமுகமாக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.