
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஆனால் இந்த 16 ஆண்டுகளில் ஒருமுறை கூட பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. ஆண்டுதோறும் பலமான அணியாக பார்க்கப்படும் பெங்களூரு அணி ஒவ்வொரு ஆண்டும் கோப்பையை தவறவிடும் போதும் ஆர்சிபி ரசிகர்கள் வருத்தமடைகிறார்கள்.
அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற 16ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்திய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐந்தாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்திருந்தது. அதேவேளையில் மீண்டும் ஒருமுறை ஆர்சிபி அணி கோப்பையை தவறவிட்டு ரசிகர்களை ஏமாற்றியது.
இன்றளவும் ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை என்றாலும் அதிக அளவில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவினை பெற்ற அணியாக பார்க்கப்படும் ஆர்சிபி அணி எதிர்வரும் 2024ஆம் ஆண்டு எப்படியாவது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியே ஆக வேண்டும் என்பதற்காக தற்போது ஒரு சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.