எதிர்வரும் ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணி இதனை செய்ய வேண்டும் - ஆர்பி சிங் கருத்து!
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணியானது விராட் கோலியை மட்டும் தக்கவைத்து விட்டு, மற்ற வீரர்கள் அனைவரையும் விடுவித்து விடவேண்டும் என்று முன்னாள் வீரர் ஆர்பி சிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இத்தொடருக்கான வீரர்கள் மேகா ஏலம் இந்தாண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்ற விவாதங்கள் எழத்தொடங்கியுள்ளன.
மேற்கொண்டு எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகளில் எத்தனை வீரர்கள் தக்கவைக்கலாம் என்ற பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் அணிகளுக்கான கட்டுபாடுகள், விதிமுறைகள் மற்றும் ஏலத்தொகை உள்ளிட்ட அறிவிப்புகளை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தலா 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ளலாம் என்றும் அதில் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் அதிகபட்சம் 5 பேரையும், அன்கேப்ட் வீரர்களில் அதிகபட்சம் 2 பேரையும் தக்க வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Trending
இந்நிலையில் ஒரு அணி 5 வீரர்களை தக்கவைக்கும் பட்சத்தில் முதல் 3 வீரர்களுக்கு ரூ.18 கோடி, ரூ.14 கோடி, ரூ.11 கோடி வீதமும் கடைசி இரு வீரர்களுக்கு ரூ.18 கோடி, 14 கோடி வீதமும் ஊதியமாக வழங்க வேண்டும் என்ற நடைமுறையும் வகுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு அணி 5 வீரர்களை தக்க வைக்கும் போது அவர்களுக்குரிய மொத்த தொகையானது ரூ.75 கோடி போக மீதமுள்ள ரூ.45 கோடியை வைத்து தான் ஏலத்தில் மற்ற வீரர்களை வாங்க முடியும் என்ற நிலையை பிசிசிஐ உருவாக்கியுள்ளது. இதனால் அணிகள் இந்த ஏலத்தில் எவ்வாறு செயல்படும் என்று பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்வரும் வீரர்கள் ஏலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து முன்னாள் வீரார் ஆர்பி சிங் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணிக்கு பெரும் சவால்கள் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. ஏனெனில் அவர்கள் விராட் கோலியை தக்கவைத்துவிட்டு, மற்ற வீரர்கள் அனைவரையும் விடுவித்து விடலாம். பிறகு தேவையான வீரர்களை மட்டும் ஆர்டிஎம் முறையில் மீண்டும் அணியில் தேர்வு செய்துகொள்ளலாம்.
Also Read: Funding To Save Test Cricket
உதாரணமாக ரஜத் பட்டிதார், முகமது சிராஜ் உள்ளிட்டோரை ரூ.11 கோடிக்கு மேல் கொடுத்து வாங்குவதை விட அவர்களை ஏலத்திற்கு முன்னதாக அணியில் இருந்து விடுவித்து, மீண்டும் ஏலத்தின் போது ஆர்டிஎம்மை பயன்படுத்து குறைவான தொகைக்கு ஏலத்தில் எடுத்துகொல்லலாம். அந்த அணிக்கு விராட் கோலி தேவை. அவர் அணிக்காக பெரிய அளவில் பங்களிப்பு அளித்துள்ளார். அதனால் பெங்களூரு அணி அவரை சுற்றியே அணியை கட்டமைக்க வேண்டும் அல்லது புதிய சிந்தனையுடன் செயல்பட வேண்டும். இந்த அணியில் விராட் கோலியை தவிர மற்ற வீரர்களில் யாரும் ரூ.18 மற்றும் ரூ.14 கோடிக்கு தக்கவைக்கப்படுவதை நினைத்து பார்க்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now