
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நாளை மதியம் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார். அதன் படி, இறுதிப் போட்டியில் எந்த இந்திய வீரர் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார், இறுதிப் போட்டியில் பிட்ச் எப்படி இருக்கும் என்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
அப்போது பேசிய அவர், "இந்திய அணி அனைத்து தரப்பிலும் பலம் வாய்ந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், தொடரின் சில போட்டிகளில் களமிறங்காமல் அதன் பிறகு சிறப்பாக செயல்பட்ட வீரர் முகமது ஷமி. வலது மற்றும் இடதுகை பேட்ஸ்மன்களுக்கு அவர் சவாலாக விளங்குகிறார். இதே நிலையை இறுதிப் போட்டியிலும் அவர் தொடர்வார், ஆனால் எங்களது வீரர்கள் இந்த களத்தில் அதிகம் விளையாடி உள்ளனர்.