
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளவர் ஜஸ்ப்ரித் பும்ரா. இவர் தற்போது நடைபெற்று இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் 6 விக்கெட்டுகளையும், இரண்டாவது போட்டியில் 9 விக்கெட்டுகளையும் என மொத்தமாக 15 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தார். இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
பும்ராவின் அபார பந்துவீச்சின் மூலம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட இத்தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் பாஸ்பாலுக்கு எதிராக ஜஸ்ப்ரித் பும்ரா பூம்பாலை காட்டி இந்தியாவை வெற்றி பெற வைத்ததாக இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அஸ்வின்,“இரண்டாவது டெஸ்ட் போட்டியின் உண்மையான மேட்ச் வின்னர் பூம்பால் தான்.