Advertisement

PAK vs ENG, 3rd Test: அறிமுக டெஸ்டில் அசத்திய ரிஹன் அஹ்மத்; வைட் வாஷ் கனவில் இங்கிலாந்து! 

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 55 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால், நிச்சயம் பாகிஸ்தானை வீழ்த்தி ஒயிட் வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Rehan Ahmed Becomes Youngest Men's Test Cricketer To Take A Five-wicket Haul On Debut
Rehan Ahmed Becomes Youngest Men's Test Cricketer To Take A Five-wicket Haul On Debut (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 19, 2022 • 09:44 PM

பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 17 வருடங்கள் கழித்து 3 போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து முதலிரண்டு போட்டிகளின் முடிவில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக தார் ரோடு போல இருந்த ராவில்பிண்டி பிட்ச்சில் டி20 இன்னிங்ஸ் விளையாடி வெற்றி கண்ட அந்த அணி சுழலுக்கு சாதகமாக அமைந்த முல்தானிலும் அதிரடி வெற்றி பெற்றது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 19, 2022 • 09:44 PM

மறுபுறம் ஆஸ் திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலேயே இங்கிலாந்திடம் அடி வாங்கி கோப்பையை கோட்டை விட்ட பாகிஸ்தான் சொந்த மண்ணிலும் மண்ணை கவ்வி கிண்டல்களையும் விமர்சனங்களையும் சந்தித்தது. அந்த நிலையில் இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி டிசம்பர் 17ஆம் தேதியன்று கராச்சியில் துவங்கியது. அதில் வென்று குறைந்தபட்சம் வைட்வாஷ் தோல்வியை தவிர்த்து சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலைநிமிர வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 304 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

Trending

இதில் ஷஃபிக் 8, ஷான் மசூத் 30, அசார் அலி 45, ஷாகீல் 23, முகமத் ரிஸ்வான் 19 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 78 ரன்களும் ஆகா சல்மான் 56 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 0, பென் டன்கட் 26, ஜோ ரூட் 0, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 26 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். 

ஆனால் ஒல்லி போப் 51 ரன்களும் ஹரி ப்ரூக் மீண்டும் சதமடித்து 111 ரன்களும் எடுக்க மார்க் வுட் 35, ஓலி ராபின்சன் 29 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முக்கிய ரன்களை எடுத்ததால் தப்பிய இங்கிலாந்து 354 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அப்ரார் அஹமத், நௌமன் அலி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 50 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தான் அறிமுக போட்டியில் விளையாடும் இளம் ஸ்பின்னர் ரிஹன் அஹ்மதின் மாயாஜால சுழலில் சிக்கி 216 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 54 ரன்களும் ஷாகீல் 53 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 167 ரன்களை துரத்தும் இங்கிலாந்து 3ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 112 என்ற நல்ல நிலையில் உள்ளது. களத்தில் பென் டன்கட் 50 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இன்னும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 55 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால் 3 – 0 (3) என்ற கணக்கில் பாகிஸ்தான் ஒயிட்வாஷ் அவமான தோல்வியை சந்திப்பது உறுதியாகியுள்ளது. மறுபுறம் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இளம் வீரர் ரிஹன் அஹ்மத் இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். 

கடந்த 2019 முதல் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் இவர் ஆரம்பகட்டத்தில் இருந்தாலும் பாகிஸ்தானை சாய்ப்பதற்காகவே இப்போட்டியில் களமிறக்கப்பட்டார். அதிலும் 18 வருடம் 126 நாட்களில் அறிமுகமான அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் விளையாடும் இங்கிலாந்து வீரர் என்ற பிரையன் கிளோஸ் அவர்களின் 72 வருட சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். அதை விட 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் (18 வருடம் 128 நாட்கள்) ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்களை எடுத்த வீரர்” என்ற பட் கமின்ஸ் சாதனையை தகர்த்து புதிய வரலாற்று உலக சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் பட் கமின்ஸ் கடந்த 2011ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஜொஹனஸ்பெர்க் நகரில் நடந்த தன்னுடைய அறிமுக போட்டியில் 18 வருடம் 196 நாட்களில் 5 விக்கெட்கள் எடுத்திருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது. அதனைத் தற்போது ரிஹன் அஹ்மத் முறியடித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement